Breaking News

அப்போவே நடிகர் அஜித் படத்தில் நடித்திருக்கும் ரெடின் கிங்ஸ்லி..!! என்ன படம்னு தெரியுமா..??

தமிழ்த்திரையுலகில் தன் தேர்ந்த நடிப்பால் அதிகளவு ரசிகர்களைக் கொண்டவர் அஜித். தல அஜித்குமாருக்கு திரையுலகில் மட்டுமல்ல…வெளியிலும் மிகுந்த நல்ல பெயர் உண்டு. மிகச்சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து, இன்று திரையுலகில் உச்சநட்சத்திரமாக இருக்கிறார். அஜித்குமார், தான் திரையுலகில் உச்சத்தில் இருந்த போதே தனது ரசிகர் மன்றங்களைக் களைத்தவர்.

நமக்குத் தொழில் நடிப்பு, ரசிகர்கள் தனக்காக தங்கள் பொன்னான நேரத்தையும், குடும்பத்தையும் மிஸ் செய்யக் கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்தார் அஜித். இதேபோல் அஜித்தை பார்க்க வேண்டுமென்றால் திரையில் மட்டும் தான் பார்க்க முடியும். தன் படம் சார்ந்த நிகழ்வு துவங்கி, எந்த பொதுநிகழ்விலும் கூட தல அஜித் தலை காட்டுவதில்லை. தல தரிசனத்திற்காக அவரது ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

அண்மையில் என்னை யாரும் தல என அழைக்க வேண்டாம் எனவும் தடை போட்டார் அஜித்குமார். தல அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்திற்காக அவரது ரசிகர்கள் வெகுவாக காத்துள்ளனர்.தல அஜித்தோடு முன்பே இப்போது காமெடியில் பேமஸ் ஆகிவரும் ரெடின் கிங்ஸ்லி நடித்திருக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன் தாரா நடித்த கோலமாவு கோகிலா மூலம் தான் ரெடின் கிங்ஸ்லி அறிமுகம் ஆனதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். நெல்சனும், கிங்ஸ்லியும் கல்லூரித் தோழர்கள். அப்படித்தான் கோல்மாவு கோகிலா வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. தொடர்ந்து டாக்டர் படத்தின் மூலம் கிங்ஸ்லி புகழின் உச்சத்துக்கே போனார். அண்ணாத்த படத்திலும் கிங்ஸ்லி நடித்திருந்தார்.

கிங்க்ஸ்லி இப்போது தளபதி விஜய் நடித்துவரும் பீஸ்ட் படத்திலும் நடித்துவருகிறார். கிங்க்ஸ்லி நடிக்க வருவதற்கு முன்பே சினிமாவில் குரூப் டேன்சராக இருந்திருக்கிறார். அந்த வகையில் அஜித்குமார் நடித்த அவள் வருவாளா? படத்தில் ஒரு பாடலுக்கு குரூப் டேன்சராக ஆடும் நடனம் இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

Check Also

ராதிகாவின் முதல் கணவர் வெள்ளைகாரனுக்கு பிறந்த மகளை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

  நமது தமிழ் திரைப்படத்தில் தற்போது வரை பல நடிகைகள் இருந்தாலும் தற்போது வரை ஒரு முன்னை நடிகையாகவும் நமது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *