Breaking News

மறைந்த பிரபல காமெடி நடிகர் குமரிமுத்துவின் கல்லறையில் அவரது பிள்ளைகள் என்ன எழுதி வைத்துள்ளார்கள் தெரியுமா?

குமரிமுத்து 20 டிசம்பர் 1940அன்று பிறந்து 28 பிப்ரவரி 2016 அன்று இ றந்தார். இவர் ஒரு தமிழ் திரைப்பட கதாபாத்திர நடிகர், நகைச்சுவை நடிகர் மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) அரசியல்வாதி ஆவார். அவர் தனித்துவமான நகைச்சுவையான சிரிப்பால் அறியப்பட்டார். குமரிமுத்து தனது தொழில் வாழ்க்கையில் மூன்று தசாப்தங்களாக 728 படங்களில் நடித்தார். அவர் வழக்கமாக நகைச்சுவை வேடங்களில் நடித்தார் மற்றும் வர்த்தக முத்திரை சிரிப்பால் அறியப்பட்டார்.

அவர் திராவிடமுன்னேற்ற கழகம் (திமுக) அரசியல் கட்சியின் உறுப்பினராக இருந்தார். குமரிமுத்து நாடிகர் சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார். மேலும் அவர் ஒரு சர்ச்சையில் சி க்கினார்.அங்கு அவர் குத்தகை மற்றும் கட்டிட இடிப்புக்கு பின்னால் உள்ள நோக்கம் குறித்து கேள்வி எழுப்பிய பின்னர் சங்கம் பற்றி எதிர்மறையாக பேசினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் நடிகர் சங்கத்திலிருந்து வெளியேற்றப் பட்டார்.

மேலைநாட்டில் இருந்து வந்து தமிழ் வளர்த்த ஜி.யு.போப் தன் மரணத்துக்கு பின்பு தன் க ல்லறையில் தன்னை தமிழ் மாணவன் என எழுதச் சொன்னதை வரலாற்றில் படித்திருப்போம்.அப்படியான ஒரு கலையை பிரதானப்படுத்திய வாசகத்தை நடிகர் குமரிமுத்துவின் வாரிசுகளும் அவரது க ல்லறையில் எழுதி வைத்துள்ளனர். திருமணம் என்னும் நிக்காஹ் பகைவனுக்கு அருள் வாய் படங்களின் இயக்குநர் அனீஸ் இயக்குநர் மகேந்திரனின் அடக்கத்தில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பார்த்த ஒரு விசயத்தை தன் முகநூல் பக்கத்தில் எழுதி இருக்கிறார். அது இப்போது வைரல் ஆகிவருகிறது.அதில், ‘’மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இ ற ந்த குமரிமுத்து, அதிகமான மகேந்திரன் படங்களில் நடித்தவர். மந்தைவெளி சென்மேரிஸ் க ல் ல றை தோட்டத்தில் மகேந்திரனின் அஞ்சலிக்காக சென்ற போது தான் குமரி முத்துவின் கல்லறையையும் பார்த்தேன். பொதுவாகவே அஞ்சலி நிகழ்ச்சிக்கு முன்னமே சென்று அங்குள்ள பிரபலங்களின் கல்லறையை அதில் உள்ள வாசகங்களை படிப்பது ரொம்பப் பிடிக்கும்.

அப்படித்தான் நாடகமேதை சங்கரதாஸ் சுவாமிகள், பாரதிதாசன், காயிதேமில்லத், கக்கன், வலம்புரிஜான், நடிகர் சந்திரபாபு,  படாபட் ஜெயலெட்சுமி என பல ரது கல்லறைகளையும் வாசித்திருக்கிறேன். அப்படி மகேந்திரன் சார் நினைவுக்கு போன போது குமரிமுத்துவின் கல்லறையை பார்த்தேன். குமரிமுத்து மாறு கண்ணாகவும், மிகச்சாதாரண மனிதராகவும் இருந்து தன் திறமையால் திரைத்துறைக்குள் வந்தவர்.

திமுகவின் நட்சத்திர பேச்சாளராகவும், கிறிஸ்தவத்தை பரப்பும் ஊழியராகவும் இருந்தார். குமரி மாவட்டத்தில் பிறந்தவர் என்பதால் அதையே அடை மொழியாக்கியவர். துவக்கத்தில் எம்.ஆர்.ராதாவின் நாடகக் குழுவில் இருந்தவர். ராதாரவியுடன் சண்டையிட்டு முதன் முதலில் சங்கத்தை விமர்சித்ததும் இவர் தான். அதனால் இவரை நடிகர் சங்கத்தில் இருந்தே நீக்க, அதை எதிர்த்து நீதி மன்றம் சென்று வெற்றி பெற்ற வரலாறும் அவருக்கு உண்டு.

இப்படிப்பட்ட மனிதரின் கல்லறையில் அவரது வாரிசுகள் என்ன எழுதி வைத்திருக்கிறார்கள் தெரியுமா.? it is the time for the god. to enjoy his laughter’ எதார்த்த சினிமாவின் வழிகாட்டி இயக்குநர் மகேந்திரன் திரைப்படம் எடுக்க அனுமதிக்காத பூமியில் துவளப் போவதை நினைத்து நகை முரணுடன் வெளியே வந்தேன்”என எழுதியுள்ளார். இது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அதை நீங்களும் பாருங்கள்..

Check Also

வீட்டில் ஆட்டிப்படைக்கும் ராகு, கேது: பிரச்சினையிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? மிஸ் பண்ணாம பாருங்க.!

நவக்கிரங்களில் ராகு கேதுவால் மனக்கசப்பும், கருத்து வேறுபாடும் நிலவும். அதைப் போக்க, வீட்டில் இந்த ஒரு விஷயத்தை செய்தால் போதும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *