Breaking News

அவரு தங்கமான மனுஷன்.. சிம்புவை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகை!

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான நிதி அகர்வால் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

 

Niddhi Agerwal
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு சிம்பு, கெளதம் மேனன் மூன்றாவது முறையாக ‘வெந்து தணிந்தது காடு‘ படத்தில் இணைகின்றனர். அண்மையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு‘ படம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் சிம்புவின் அடுத்த படத்திற்கு ஆர்வமுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தில் உடல் எடைக்காக அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட சிம்பு, கடந்த பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் படத்தின் மூலம் உடல் எடையை முழுவதுமாக குறைத்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தார். இந்தப்படத்தில் சிம்பு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் நிதி அகர்வால்.

அதனை தொடர்ந்து ஜெயம் ரவி ஜோடியாக ‘பூமி’ படத்திலும் நடித்திருந்தார். தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிதி அகர்வால், அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களுடன் டச்சிலே இருக்கிறார்.

இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நிதி அகர்வாலிடம், சிம்பு பற்றி ஒரு வார்த்தையில் கூறுமாறு ரசிகர் கேட்டார். அதற்கு ‘தங்கமான மனிதர்’ என பதிலளித்துள்ளார் நிதி அகர்வால். அவரின் இந்த பதில் சிம்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியான ‘மாநாடு’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Check Also

ராதிகாவின் முதல் கணவர் வெள்ளைகாரனுக்கு பிறந்த மகளை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

  நமது தமிழ் திரைப்படத்தில் தற்போது வரை பல நடிகைகள் இருந்தாலும் தற்போது வரை ஒரு முன்னை நடிகையாகவும் நமது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *