Breaking News

திருமண மேடையில் ஆனந்த கண்ணீரில் நனைந்த நக்‌ஷத்ரா – வைரலாகும் புகைப்படங்கள் ரசியர்கள் மகிழ்ச்சி

பிரபல சின்னத்திரை நடிகை நக்‌ஷத்ராவின் திருமண புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரும், சீரியல் நடிகையுமான நக்‌ஷத்ரா நாகேஷ் டிவியில் அறிமுகமாகும் முன் IHM-ல் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பை முடித்தார். முதன் முதலாக தந்தி டிவியில் வானவில் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன் பின்னர் ஜோடி நம்பர் 1 , சன் சிங்கர், சன் குடும்ப விருதுகள் உள்ளிட்ட ஷோக்களையும் தொகுத்து வழங்கினார்.

தொடர்ந்து வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், ரோஜா, மின்னலே, திருமகள், நாயகி உட்பட பல சீரியல்களில் நடித்துள்ளார். சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் அவர் படங்களில் நடித்துள்ளார். சேட்டை படத்தில் பிரேம்ஜியுடன் ஒரு பாடலில் அறிமுகமான நக்‌ஷத்ரா வாயை மூடி பேசவும், இரும்பு குதிரை, புலிவால், நம்பியார், இந்திரஜித், மிஸ்டர் லோக்கல் படங்களிலும் நடித்ததோடு மட்டுமல்லாமல், ஹே சினாமிகா, வஞ்சகன், வணிகன் ஆகிய படங்களிலும் நடித்தும் வருகிறார்.

இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக ராகவ் என்பவரை காதலிப்பதாக சமீபத்தில்  அவர் அறிவித்தார். மேலும் கடந்த ஜனவரியில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து இந்த ஜோடி  தனது திருமணத்தை மிகவும் மகிழ்ச்சியான தருணமாக மாற்ற ப்ரீ-வெட்டிங் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தது.

இந்நிலையில் நக்‌ஷத்ரா – ராகவ் திருமணம் நேற்று கோலாகலாமாக நடைபெற்றது. கடந்த மூன்று நாட்களாக சங்கீத், மெஹந்தி விழா என நடைபெற்ற இந்த திருமண வைபவத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர். தனது திருமண புகைப்படங்களை நக்‌ஷத்ரா தனது சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

 

 

 

Check Also

தேம்பி தேம்பி அழுத பொண்ணுக்கு மணமகன் செய்த வேலையை பாருங்க.!

மணப்பெண்ணை பார்த்துவிட்டு மணமகன் தேம்பி தேம்பி அழுத காட்சி காண்பவர்களை கலங்க வைத்துள்ளது. திருமணம் என்றாலே மகிழ்ச்சியான தருணம் தான். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *