Breaking News

மாலை நேரத்தில் குழந்தைகள் விரும்பி சாப்பிட… சுவையான தக்காளி பஜ்ஜி – செய்வது எப்படி?

பஜ்ஜி என்றாலே பலருக்கும் பிடிக்கும், அதிலும் வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜியை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால், இங்கே சுவையான தக்காளி பஜ்ஜி எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்…

தேவையான பொருட்கள்;

தக்காளி – 2 வட்டமாக நறுக்கியது

கடலை மாவு – 3/4 கப்

அரிசி மாவு – 3 டேபிள் ஸ்பூன்

பேக்கிங் சோடா – 1 சிட்டிகை

மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

கேசரி பவுடர் – 1 சிட்டிகை

 

செய்முறை விளக்கம்;

முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, பேக்கிங் சோடா, கேசரி பவுடர், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

அதன் பின்னர், அந்த மாவில் தண்ணீர் ஊற்றி ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் தக்காளி துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான தக்காளி பஜ்ஜி ரெடி!

இதனை மாலை நேரத்தில் செய்துகொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க….

Check Also

பாலுடன் இந்த பழத்தினை சேர்த்து சாப்பிடவே கூடாதாம்! இனியும் இந்த தவறை செய்யாதீங்க

பாலும் பழமும் என்ற சொல்லில் பழம் என்பது வாழைப்பழத்தையே குறிக்கும். ஆனால் இந்த இரண்டும் ஒன்றாக கலந்து சாப்பிட்டால் உடல்நலத்திற்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *