Breaking News

பிரியங்காவை இதனால் தான் எனக்கு பிடிக்காது!! வெளிய வந்ததும் வெளிப்படையாக கூறிய இமான் அண்ணாச்சி

பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த போது தனக்கு பிரியங்காவை பிடிக்காமல் போனது ஏன்  என்பதற்கான காரணத்தை கூறியுள்ளார் இமான் அண்ணாச்சி.

மற்ற சீசன்களை காட்டிலும், இந்த சீசனில் ஒவ்வொருவரும் தனித்தனியாக கேம் விளையாடி வருகின்றனர், சமீபத்தில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய இமான் அண்ணாச்சிக்கு ஆதரவு பெருகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற போது இருந்ததை விட, தனக்கு இப்போது ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துள்ளதாக அகம் மகிழ்ந்துள்ளார் இமான் அண்ணாச்சி.

இந்நிலையில் பிரியங்காவை ஏன் பிடிக்கவில்லை என்பதை சமீபத்திய பேட்டியொன்றில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், பிக்பாஸ் வீட்டில் புறம் பேசும் பழக்கம் இருந்தது, அது எனக்கு பிடிக்கவில்லை, நான் எதுவாக இருந்தாலும் முகத்துக்கு நேராக பேசிவிடுவேன்.

அப்படித்தான் பிரியங்கா கத்தும் போதெல்லாம் செய்வேன், பிரியங்காவிடம், இங்க வாம்மா, உனக்கு நிறைய ரசிகர்கள் இருப்பார்கள்.

இங்கு நீ நடந்து கொள்வதை பொறுத்து “இப்படித்தான் நீ” என எடை போட்டு விடுவார்கள், எதற்கெடுத்தாலும் கத்திப் பேசாதே, அது எனக்கு அலர்ஜியா இருக்கு என்றேன்.

ஒரு சின்ன விஷயத்துக்கு கூட பிரியங்கா கத்திப் பேசுவது எனக்கு பிடிக்கவில்லை, இது தான் எனக்கு பிரியங்காவிடம் பிடிக்காத விஷயம் என தெரிவித்துள்ளார்.

மேலும் நான் எல்லாத்தையும் முகத்துக்கு நேரவே சொல்வது பிரியங்காவுக்கு என்னிடம் பிடிக்காமல் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Check Also

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து காணாமல் போன பிரியங்கா: என்ன நடந்தது?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகிய கடைசி இரண்டு ப்ரொமோ காட்சியில் பிரியங்கா காணப்படாததால் அவருக்கு என்ன நடந்தது என்று ரசிகர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *