Breaking News

குழந்தைக்கு பாலூட்டியபடி ஷூட்டிங்கில் மேக்கப்! வெண்பா வெளியி்ட்ட புகைப்படம். ரசியர்கள் அதிர்ச்சி.!

பிரபல சீரியலில் வில்லியாக நடித்த வெண்பா பிரசவத்திற்கு பின்பு தனது குழந்தையுடன் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

பிரபல ரிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை ஃபரீனா.

ரஹ்மான் உபாயத் என்பரை கடந்த 2017 ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட இவர், தான் கர்ப்பமாக இருப்பதாக கடந்த ஆண்டில் தனது இன்ஸ்டா பதிவின் மூலம் தெரிவித்திருந்தார்.

பின்பு கர்ப்பமாக நிலையிலும், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதும், நடிப்பில் அசத்திய இவரை ரசிகர்கள் பெருமிதம் கொண்டனர்.

பிரசவ காலத்தின் இறுதி நாட்களில் அவரால் நடிக்க முடியாது என்பதால் அவருக்கான காட்சிகள் குறைக்கப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டது போன்று காட்டப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், கடந்த நவம்பர் 19ம் தேதி ஃபரினா ஆசாத்துக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மருத்துவமனையில் இருந்தவாறு மகனுடன் புகைப்படத்தினை வெளியிட்டு, தான் விரைவில் திரும்பி வருவேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தனது கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார். அந்த புகைப்படங்களையும், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் ஃபரினா.

அந்த புகைப்படத்தில் தன் பச்சிளம் குழந்தைக்கு பாலூட்டியபடியே மேக்கப் போட்டு கொண்டு இருக்கிறார். இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் அவரின் கடின உழைப்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது புதிய கண்ணம்மா மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோரின் வரவால் சீரியல் சூடுபிடித்துள்ள நிலையில், ஃபரினா வரவு இன்னும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என ரசிகர்கள் தெரிவிக்கிறா

Check Also

தேம்பி தேம்பி அழுத பொண்ணுக்கு மணமகன் செய்த வேலையை பாருங்க.!

மணப்பெண்ணை பார்த்துவிட்டு மணமகன் தேம்பி தேம்பி அழுத காட்சி காண்பவர்களை கலங்க வைத்துள்ளது. திருமணம் என்றாலே மகிழ்ச்சியான தருணம் தான். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *