Breaking News

அவித்த முட்டை மிளகு பிரட்டல் 10 நிமிடத்தில் செய்யலாம்… எப்படி என்று நீங்களே பாருங்க.!

அவித்த முட்டை மிளகு பிரட்டல் செய்வது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

  1. முட்டை – 2
  2. மிளகு – 1 தேக்கரண்டி
  3. சீரகத்தூள் – அரை தேக்கரண்டி
  4. உப்பு – 1/4 தேக்கரண்டி
  5. கறிவேப்பிலை – சிறிதளவு
  6. பெருஞ்சீரகம் – சிறிதளவு
  7. எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி

செய்முறை

முட்டைகளை முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வேக வைத்துக் கொள்ளவும்.

முட்டை வெந்தவுடன் ஓட்டை நீக்கி விட்டு இரண்டாக வெட்டி வைக்கவும்.

மிளகை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருஞ்சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

பின்னர் அதில் முட்டையை போட்டு 2 நிமிடம் அப்படியே வைக்கவும். பின்னர் மறுபுறம் திருப்பி போட்டு சிறிது நேரம் வைத்து மசாலா முட்டையில் நன்றாக சேர்ந்ததும் எடுத்து பரிமாறவும். சுவையான முட்டை மிளகு பிரட்டல் ரெடி.

Check Also

பாலுடன் இந்த பழத்தினை சேர்த்து சாப்பிடவே கூடாதாம்! இனியும் இந்த தவறை செய்யாதீங்க

பாலும் பழமும் என்ற சொல்லில் பழம் என்பது வாழைப்பழத்தையே குறிக்கும். ஆனால் இந்த இரண்டும் ஒன்றாக கலந்து சாப்பிட்டால் உடல்நலத்திற்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *