Breaking News

நடிகர் மலேசியா வாசுதேவனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..?என்னது இவரது மகன் தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகரா..?

மலையாள சினிமாவில் பிரபலமாகி தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராகவும் நடிகராகவும் திகழ்ந்தவர் மலேசியா வாசுதேவன். இவர் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளிலும் பணியாற்றியுள்ளார். இவர் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தனது ஆரம்ப காலத்தில் மலேசியாவில் பல மேடை நாடகங்ளில் நடித்து அந்த அனுபவத்தை நம்பிக்கையாக கொண்டு சென்னையில் திரைப்பட வாய்ப்பு தேடிக்  கொண்டிருந்தார்.

1977 ஆம் ஆண்டு இயக்குனர் பஞ்சு அருணாசலம் இயக்கத்தில் அவர் எனக்கே சொந்தம் எனும் திரைப்படத்தில்  துணைக் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த வகையில் நிழல்கள் சுடுவதில்லை, ஒரு கைதியின் டைரி, முதல் வசந்தம், ஊமைவிழிகள்,

ஜல்லிக் கட்டு, திருடா திருடா, பூவே உனக்காக, பத்ரி, நினைத்து நினைத்து பார்த்தேன், புன்னகைதேசம், கோபாலா கோபாலா, அமைதிப்படை போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுமட்டுமில்லாமல் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த சாமந்திப்பூ எனும் திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக  பணிபுரிந்தார்.

அந்த வகையில் பாக்கு வெத்தலை, ஆயிரம் கைகள் போன்ற படங்களில் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். மேலும் அன்றைய காலகட்டத்தில் பிரபல பாடகர் ஆகவும் திகழ்ந்து வந்தார். அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே எனும் திரைப்படத்தில் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு எனும் பாடலை பாடி

மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இவரது பாடல்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்காது  இடம் பெற்றுள்ளது. மேலும் இவர் குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிலந்தி வலை எனும் தொலைக்காட்சி  தொடர்களிலும்   நடித்துள்ளார். மேலும் நடிகர் மலேசியா வாசுதேவன் உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யுகேந்திரன், பிரசாந்தினி, பவித்ரா என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

2011ம் ஆண்டு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த மலேசியா வாசுதேவன் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த நிலையில் நடிகர் மலேசியா வாசுதேவனின் மனைவி மற்றும் மகன் மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது..

Check Also

பசிக்கும்ல! சோறு முக்கியமா சிம்பு! இடையில் கிடாவெட்டிய பிரேம்ஜி.. மிஸ் பண்ணாம பாருங்க.!

தமிழ் சினிமாவில் இசைக்குடும்பத்தில் இருந்து வந்து மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகர் பிரேம்ஜி அமரன். காமெடி நடிகராக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *