நியூசிலாந்து நாட்டில், ஆக்லாந்து நகரை சேர்ந்தவர் ஜேன் வெட்டிங். இவர் சமீப நாட்களாக தனது காதுகளில் தண்ணீர் இருப்பது போன்ற உணர்வை அனுபவித்து வந்துள்ளார்.
இதனால், ஒரு நாள் தூங்கும் போது காதுக்குள் ஏதோ நெளிவது போன்ற உணர்வை அனுபவித்து இருக்கிறார். அப்போது அதிர்ச்சியடைந்து ஜேன், மருத்துவமனைக்கு சென்று விஷயத்தை கூறியுள்ளார்.
உடனே, காது மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற அறிவுறுத்திய நிலையில், காது மருத்துவர் ஜேனை சோதனை செய்துவிட்டு காதில் பூச்சி இருப்பதை தெரிவித்துள்ளனர்.
அப்போது மருத்துவர்கள் பூச்சியை அகற்ற நடவடிக்கை எடுத்து, உறிஞ்சும் சாதனத்தின் உதவியுடன் அதனை வெளியே எடுத்தனர். அதிலிருந்து கரப்பான் பூச்சி வெளியே வந்துள்ளது.