தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து பிஸியாக இருப்பவர் அனிரூத். 3 படத்தின் மூலம் இசை வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது பீஸ்ட், டான், விக்ரம் போன்ற படம் வரை இசையமைத்து வருகிறார்.
இசையை தவிர மற்ற சர்ச்சைகளிலும் சிக்கி வரும் அனிரூத் சமீபத்தில் நடிகைகள், பாடகிகளுடன் இரவு பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலானது. அதேபோல் பிக்பாஸ் 5-ல் கலந்து கொண்ட ஐக்கி பெர்ரியுடன் இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியானது.
ஐக்கி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் முன்பே அனிரூத்தை தெரிந்து வைத்திருந்தார். அப்போது எடுத்த புகைப்படம் இணையத்தில் பரவியது. தற்போது ஐக்கி பெர்ரியை வெறுப்பேற்ற அந்த புகைப்படத்தை மீண்டும் வைரலாகி வருகிறார்கள்.