நடிகை நயன்தாராவை லேடி சூப்பர்ஸ்டார் என்று தான் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள். அந்த அளவுக்கு முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருந்து வருகிறார் அவர். சோலோ ஹீரோயினாக சில படங்களில் நடித்து வெற்றி பெற்றாலும் மற்ற முன்னணி நடிகர்கள் படங்களிலும் நடிக்கிறார். அவற்றில் நடிப்பதால் தான் நல்ல சம்பளம் வாங்க முடியும் என்பதும் ஒரு காரணம்.
தற்போது லூசிபர் படத்தை தெலுங்கில் ரிமேக் செய்யும் நிலையில் அதில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக அவர் நான்கு கோடி சம்பளம் கேட்கிறாராம்.
வழக்கமாக தெலுங்கு சினிமாவில் நடிகைகளுக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட இது மிக அதிகம். வயதான நடிகர் என்பதால் தான் நயன் அதிக சம்பளம் கேட்கிறாரோ என சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கின்றனர்.