பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது 70 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த வார வெளியேற்றத்தில் இமான் அண்ணாச்சி வெளியேறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கடந்த வாரத்தில் ஏகப்பட்ட சண்டை சச்சரவுகள் அரங்கேறி இருக்கிறது. அதையெல்லாம் கமல் முன்னிலையில் இன்று அனைவரையும் கேள்விக்கேட்டு போட்டு தாக்கி வருகிறார்.
அந்த வகையில் பாவனி கடந்த நாட்களுக்கு முன்பு ராஜு மற்றும் சிபியிடம் அபிநய் கிட்ட எப்படி வேணா பழகுவேன் என கத்திய சம்பவத்தை பற்றி ராஜூ கமலிடம் விளக்க அதற்கு பாவனியிடம் கமல் மத்தவங்கள பேசாதீங்க சொல்லிட்டு நீங்க எப்படி பேசி இருக்கீங்க என சரமாரியான கேள்வியை எழுப்பியுள்ளார்.
மேலும், அபிநயிடம் பாவனி உங்கள பத்தி என்ன சொல்லி இருக்காங்கனு தெரியனும்மா என குறும்படத்தை போட கூறி இருக்கிறார். இதனால் போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர்.