Breaking News

பிக் பாஸில் 3 லட்ச ரூபா பணப் பெட்டிய எடுத்துட்டு வர சரத்குமாருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா…?

பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்பொழுது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.ஏறக்குறைய அனைவருமே பிக்பாஸ் வீட்டை பிரிய கூடிய சூழல் வந்துவிட்டது.

தற்போது பிக்பாஸ் வீட்டில் 4ஆண்கள் மற்றும் 3பெண்கள் உள்ளார்கள்.இதில் யார் இந்த வாரம் வெளியேறுவது யார் என்பது எல்லாம் இனித்தான் தெரியும்.கடைசி நாட்கள் என்பதால் பிக்பாஸ் போட்டியாளர்களை ஜாலியாக வைத்துள்ளார் போல தெரிகின்றது.

இந்த சீசன் அடுத்த வாரம் நிறைவடைய இருக்கும் நிலையில் இந்த சீசனுக்கான பணப் பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. நேற்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில் 3 லட்ச ரூபாய் பணப் பெட்டியுடன் சரத்குமார் உள்ளே வந்து இருந்தார். கடந்த சீசனில் 5 லட்ச ரூபாபாயை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் கேபி. அத்தோடு இவரது முடிவை பலரும் பாராட்டினர். மேலும் அதற்க்கு முந்தைய சீசனில் கவின் 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.

மேலும் அந்த சீஸனின் டைட்டில் வின்னராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கவின் பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.அத்தோடு கடந்த இரண்டு சீசனில் 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த சீசனில் 3 லட்சம் தற்போது வரை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பெட்டியை யாரும் எடுத்து செல்லவில்லை என்றால் அடுத்த தொகை மாறும்.

பொதுவாக பெரிய நடிகர்கள் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள் என்றால் சும்மா ஒன்றும் வந்துவிட மாட்டார்கள் அல்லவா. அந்த வகையில் பிக் பாஸ் வீட்டிற்குள் பணப் பெட்டியை எடுத்து சென்ற சரத்குமாருக்கு 10 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதாக இணையத்தளத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நடிகர் சரத்குமாருக்கு டிவி நிகழ்ச்சி ஒன்றும் புதிதான விஷயம் அல்ல. இவர் ஏற்கனவே சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன் ஒளிபார்ப்பான ‘கோடீஸ்வரன்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கின்றார். அந்த நிகழ்ச்சி மாபெரும் வெற்றியடைந்து. அந்த நிகழ்ச்சிக்கு பின்னரே விஜய் டிவியில் உங்களில் யார் கோடீஸ்வரன் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

முதன் முறையாக நீச்சல் உடையில் தொடையழகி மேகா ஆகாஷ்..! என்ன ஒரு அழகு.

சில நடிகைகள் மீது நம்மை அறியாமல் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படும் அந்த அளவுக்கு அழகாக இருப்பார்கள். இந்நிலையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *