Breaking News

இந்த ஒரு விஷயத்தையும் விட்டு வைக்காத கமல்! உலக நாயகன்னா சும்மாவா?

தமிழ் திரையுலகில் தனது சிறுவயதிலேயே தனது நடிப்பு திறமையால் பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல முன்னணி நடிகர் உலகநாயகன் என்று எல்லாராலும் அழைக்கப்படும் கமல்ஹாசன். இவர் நடித்திராத கதைகளே இல்லை எனலாம் அந்த அளவிற்கு மாறுபட்ட கதையம்சங்கள் கொண்ட பல வெற்றி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென நீங்காத ஒரு இடத்தையும் அடையாளத்தையும் ஏற்படுத்தி கொண்டார். இந்நிலையில் இத்தனை வயதை கடந்த நிலையிலும் இன்னமும் இளமை குறையாமல் பல இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் போட்டியாக தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது கமல் ஹாசன் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து பிரபல முன்னணி இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இவ்வாறு தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையிலும் அரசியல் மற்றும் சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது என பல பணிகளை செய்து வருகிறார் கமல் ஹாசன்.

இவ்வாறு சமூகத்தில் பிரபலமாக இருக்கும் இவரது குடும்ப வாழ்க்கை தான் பலருக்கும் வதந்திகள் பேச வாய்ப்பு கொடுக்கும் வகையில் உள்ளது. இவர் இரு திருமணங்களுக்கு பிறகு திருமணம் செய்யாமல் இருக்கும் கமல் காதல், நடிகைகளுடன் தொடர்பு என்று கிசுகிசுக்களிலும் சிக்குவார்.

அப்படி இருந்தாலும் பல திறமைகளை உள்ளடக்கியவர் நடிகர் கமல். அந்த வகையில் மேக்கப் ஆர்டிஸ்ட்டாகவும் பணியாற்றியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நடிப்பு, இயக்கம், கதை ஆசிரியர், தொகுப்பாளர், தயாரிப்பாளர் என்று பன்முகத்திறமை கொண்ட கமல் மேக்கப் ஆர்டிஸ்ட்டாக ஹாலிவுட்டின் ஸ்டார் ட்ரெக், 1988ல் வெளியான ராம்போ 3 போன்ற படத்தில் பணியாற்றியுள்ளார்.

மேலும், அகாடமி விருது பெற்ற பிரபல மேக்கப் மேன் மைக்கேல் ஓரிடம் 40 நாட்களாக அந்த கலையை பயிற்சி பெற்றாராம். பின் தூங்காவனம் படத்தில் நடிகை திரிஷாவிற்கு ஒரு நாள் மேக்கப் போட்டுள்ளார்.

Check Also

ராதிகாவின் முதல் கணவர் வெள்ளைகாரனுக்கு பிறந்த மகளை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

  நமது தமிழ் திரைப்படத்தில் தற்போது வரை பல நடிகைகள் இருந்தாலும் தற்போது வரை ஒரு முன்னை நடிகையாகவும் நமது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *